ETV Bharat / state

தமிழகத்தில் அதிகபட்ச வேட்பாளர்களைக் கொண்ட கரூர் தொகுதி.. எப்படி தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது? - ஆட்சியர் விளக்கம்! - KARUR Lok Sabha CONSTITUENCY - KARUR LOK SABHA CONSTITUENCY

Karur Lok Sabha Constituency: கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தமிழ்நாடு அளவில் மிகவும் கவனிக்கக்கூடிய தொகுதியாக கரூர் மக்களவைத் தொகுதி மாறி உள்ளது.

தமிழக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள கரூர் தொகுதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 10:43 PM IST

கரூர்: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி துவங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெற்று, கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று (மார்ச் 30) வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில், இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக, கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

  • காங்கிரஸ் - செ.ஜோதிமணி - கை
  • அதிமுக - ல.தங்கவேல் - இரட்டை இலை
  • பாரதிய ஜனதா கட்சி - வி.வி.செந்தில்நாதன் - தாமரை
  • நாம் தமிழர் கட்சி - ரெ.கருப்பையா - ஒலிவாங்கி (மைக்)
  • பகுஜன் சமாஜ் கட்சி - சீ.சங்கரன் - யானை
  • சாமானிய மக்கள் நலக் கட்சி - ந.சண்முகம் - மோதிரம்
  • இந்திய கணசங்கம் கட்சி - க.முருகேசன் - வெண்டக்காய்
  • ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - பி.வின்சென்ட் - பலாப்பழம்

இவர்களுடன், 46 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த முறை நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், இம்முறை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சக்திவேல் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பிரஷர் குக்கர் சின்னம், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சதாசிவம் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பானை சின்னம், சுயேட்சை வேட்பாளர் சதீஸ் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னம், கரூரில் ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சார்பில் போட்டியிடும் வின்சென்ட் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வேட்பாளர் இறுதிப் பட்டியலை வெளியிட்ட கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் செலவினப் பார்வையாளர் போஸ் பாபு அல்லி ஆகியோர் முன்னிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய கரூர் நாடாளுமன்றய்ஜ் தொகுதி தேர்தல் அதிகாரி தங்கவேல், “கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கரூர், மணப்பாறை, விராலிமலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற வீதத்தில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு, மார்ச் 31ஆம் தேதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்கள் முன்னிலையில், கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் போது, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டு, பின்னர் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட உள்ளது” என தெரிவித்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், மிக தாமதமாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களம் கானும் 950 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்! - TN Final Lok Sabha Candidate List

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.