கரூர்: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிளும் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த வாரம் தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முன்தினம் நிறைவு பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் பெரும்பாலன மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பிராதான அரசியல் கட்சிகள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் வரை பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டம் திருக்காடுதுறை தவிட்டுப்பாளையம் கோம்புபாளையம், வேட்டமங்கலம் ஊராட்சிகளில் நேற்று (வியாழக்கிழமை) பாஜகவின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில்,"கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று முதல் நாள் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளேன்.
சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்பளிக்கின்றனர். இந்தத் தேர்தல் மாநில அரசை தேர்வு செய்வதற்காக நடக்கும் தேர்தல் அல்ல..மத்திய அரசை தேர்வு செய்வதற்கான ஒரு தேர்தல் என்பதை வாக்காளர்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட்டு, வாக்கு சேகரிக்க வருகை தந்துள்ளேன். அரசியலில் , நேர்மையாக மக்களுக்கான சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ள தனக்கு, மற்ற அரசியல்வாதிகளைப் போல பணம்,நிலம் ஆகியவற்றை சேர்க்க ஆசை இல்லை.
தங்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நான் நிறைவேற்றாவிட்டால் நாளை நீங்கள் என் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம் என்றார். அரசியலில் சேவையாற்றுவதற்காக 29 வயதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். தற்பொழுது மூன்றாவது முறையாக,போட்டியிட்டுள்ளேன். இதனால் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் விழுந்து ஆசி கேட்டு வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன். இதனைத் தொடர்ந்து வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதி: புதுச்சேரியில் 996 லிட்டர் மதுபானம் பறிமுதல்..தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் - Puducherry Lok Sabha