சிவகங்கை: தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் 5 மணி நிலவரப்படி, 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 5 மணி நிலவரப்படி 62.50 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் லட்சுமி அருணாச்சலம் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தன் மனைவி ஸ்ரீநிதி மற்றும் மகளுடன் வாக்கு செலுத்தினார்.
பின்னர், வாக்குச்சாவடியில் ஏன் வாக்கு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, முதலில் வைக்க வேண்டிய வாக்கு இயந்திரத்தை இரண்டாவதாகவும், இரண்டாவதாக வைக்க வேண்டிய வாக்கு இயந்திரத்தை முதலிலும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: விஜய் முதல் விக்ரம் வரை வாக்கு செலுத்திய திரைப்பிரபலங்களின் கிளிக்ஸ்! - Lok Sabha Election 2024