ETV Bharat / state

ஆடி முதல் நாளே தள்ளுபடி விற்பனை.. காரைக்குடியில் பட்டுப்புடவை வாங்க குவிந்த பெண்கள்! - aadi Discount Sale in kaaraikudi

Aadi Discount Sale in kaaraikudi: காரைக்குடி ஜவுளிக்கடையில் அதிகாலையில் துவங்கிய ஆடித் தள்ளுபடி விற்பனையில் பட்டுப்புடவை வாங்க ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

பட்டுப்புடவை வாங்க குவிந்த பெண்கள்
பட்டுப்புடவை வாங்க குவிந்த பெண்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 11:24 AM IST

Updated : Jul 17, 2024, 12:28 PM IST

சிவகங்கை: தமிழகத்தில் ஆடி மாதத்தில் பொதுவாகவே வீடுகளில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைவு. இதனால் ஜவுளிக் கடைகளில் வருடம் முழுவதும் உள்ள பழைய இருப்பு ஜவுளிகளை லாப நோக்கம் இல்லாமல் தள்ளுபடி என்கிற பெயரில் விற்பனை செய்தால், புதிய ஜவுளிகளை மக்கள் பார்வைக்கு வைக்க முடியும் என்பதால், ஒவ்வொரு வருட ஆடி முதல் நாள் அனைத்து கடைகளிலும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடி விற்பனை அறிவிப்பது வழக்கம்.

பட்டுப்புடவை வாங்க குவிந்த பெண்களின் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை சார்பில், திருமண மண்டபத்தில் ஆடி முதல் தேதி மட்டும் பட்டுப் புடவைகளுக்கு 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி விற்பனை செய்தனர்.

இந்நிலையில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் அதிகாலையிலே பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து காத்திருந்து தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகளை எடுத்துச் செல்கின்றனர்.

சுப நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பெண்கள் அதிகம் விரும்பி அணியும் பட்டுப்புடவையினை ஆடி முதல் தேதியில் தள்ளுபடி விற்பனை செய்வது பெண்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதிகாலையிலிருந்தே தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகளை எடுக்கக் காத்திருந்தனர்.

மேலும் தள்ளுபடி விற்பனைக்குக் கதவு திறந்ததும் பெண்கள் ஒருவரை ஒருவர் முந்தி சென்று அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பட்டுப் புடவைகளைத் தேடித் தேடி ஆர்வமாக எடுத்தனர்.

இதையும் படிங்க: தமிழ் வழிக்கல்வி பயிலும் நாகலாந்து மாணவி.. சிவகங்கையில் சாத்தியமானது எப்படி?

Last Updated : Jul 17, 2024, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.