ETV Bharat / state

குமரியில் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது! - POCSO Act - POCSO ACT

கன்னியாகுமரியில் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 10:56 AM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான இளைஞர். மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த பழக்கம் காரணமாக நாளடைவில் இருவரும் வீடியோ கால் மூலம் பேசி வந்து உள்ளனர். தொடர்ந்து பேசிவந்த நிலையில் சிறுமிக்கு தெரியாமல் அவரது ஆபாச வீடியோக்களை வீடியோ காலில் பதிவு செய்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி, இளைஞருடன் உடன் இருந்த நட்பை முறித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது செல்போனில் பதிவு செய்து இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளார். இதனை இளைஞரின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து, அதனை மேலும் பலருக்கு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் வீடியோவை பதிவிறக்கம் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கழிவுநீர் குழாய் தொடர்பாக பிரச்னை.. மநீம நிர்வாகி தாக்குதல்? பெண் பகீர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.