ETV Bharat / state

"பாஜக ஆட்சி நிலைக்காது என்பது சுப்பிரமணிய சுவாமியின் ஆசை" - கனிமொழி விமர்சனம்! - Thoothukudi MP Kanimozhi

Kanimozhi criticize Subramanya swamy:பாஜக ஆட்சி ஓராண்டு கூட நிலைக்காது என சுப்பிரமணிய சுவாமி கூறியது அவருடைய ஆசை, நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 9:37 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கை இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடிகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளைச் சந்தித்து கேட்டறிந்தேன். இது குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலும் தெரிவித்துள்ளோம்.

நீட் தேர்வில் உள்ள ஒவ்வோரு பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை சரி செய்வதை விட, நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று தான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

பின்னர் அவரிடம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறைவாக மத்திய அரசு வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக வழங்கி உள்ளது. இது குறித்து துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம்.

தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. பலமுறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் வாக்குகள் சேகரிக்க வந்துள்ளார். ஆனால், ஒருபோதும் நம்முடைய கோரிக்கையை கேட்பதில்லை என்பது தான் வருத்தமான விஷயமாக உள்ளது. குறிப்பாக, அவர்கள் ஆட்சி செயும் மாநிலங்களுக்கு அதிகமான நிதி வழங்கப்படுகிறது.

மேலும், ஜிஎஸ்டியில் நமக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையும் சரியாக தரவில்லை. வெள்ள நிவாரண தொகையும் தரவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையும், வரவேண்டிய நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப்படுகிறது. பெருவெள்ள பாதிப்பின் போது முதலமைச்சர் கேட்ட எந்தவித நிவாரணத் தொகையும் மத்திய அரசு தரவில்லை" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பாஜக தனிப் பெரும்பான்மை பெறாமல் ஆட்சி அமைத்திருப்பது என்பது ஓராண்டு கூட நிலைக்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கருத்து குறித்து கேட்ட போது, "முதன்முறையாக அவர் நல்ல விசயத்தை கூறியுள்ளார். அது அவருடைய ஆசை, நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை".. அன்புமணி ராமதாஸ் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.