ETV Bharat / state

கந்தசஷ்டி விழா: முருகனை காண பழனியில் குவியும் பக்தர்கள்.. எந்தெந்த நாள் என்ன நிகழ்வு விபரம் உள்ளே

தமிழ் கடவுளான முருகனின் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று கந்தசஷ்டி விழா. இந்த விழா இன்று காப்புகட்டுதலுடன் துவங்க உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளின் 3 ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி விழா. இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா இன்று மதியம் மலைக்கோயிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

நவ.7ஆம் தேதி சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நவ.7ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளாபூஜையும், படையல் நெய்வேத்திய நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

பழனி முருகன் கோயில் (Credits- ETV Bharat Tamil Nadu)

அதனை தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மலைக்கோயிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும். அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.

இதையும் படிங்க: 43 நாட்களில் நிரம்பிய பழனி முருகன் கோயில் உண்டியல்.. ரூ.5.3 கோடி பக்தர்கள் காணிக்கை

திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறும் கந்தசஷ்டி விழா: அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8 ஆம் காலை 9.30 மணிக்கு மலைக்கோயிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். தொடர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நிகழ்வுகளை நேரில் காண அதிகபடியான பக்தர்கள் வருவார்கள் என விழா குழு எதிர்ப்பார்க்கப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்வுகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

பழனியில் கனமழை
பழனியில் கனமழை (Credit - ETV Bharat Tamil Nadu)

மழையில் நனைந்தபடி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்: முன்னதாக பல்வேறு பகுதியில் இருந்து கந்தசஷ்டி விழாவிற்காக பழனி கோயிலுக்கு வந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.