ETV Bharat / state

'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு! - தமிழக அரசு அறிவிப்பு! - KALAIGNAR KANAVU ILLAM SCHEME

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கியும், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கியும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: தமிழ்நாடு அரசு, கலைஞர் கனவு இல்லத் திட்டம் மற்றும் திருச்சி உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில் கலைஞர் கனவு இல்லத் திட்டம் தொடர்பான செய்திக்குறிப்பில், "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 (மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக 'அனைவருக்கும் வீடு' என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உள்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account - SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1,051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு:

திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று ஜூன் 27-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில், உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரை மற்றும் 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் பொதுப்பணித்துறையின் கீழ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அதில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.