தென்காசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், நீண்ட நேர ஆங்கில சொற்கோவை (Vocabulary) மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70 கல்வி நிறுவனங்களில் இருந்து 10 வயதிற்கு மேற்பட்ட ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 1,000 ஆங்கில வார்த்தைகளை இடைவிடாது ஒவ்வொன்றாக அர்த்தம், எழுத்துக் கூட்டல் மற்றும் உச்சரிப்புடன் வெளிப்படுத்தினர். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (Indian Book Of Records) இயக்குநர் கவிதா ஜெயின் பதிவு செய்தார். இதில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட கடையநல்லூர் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டிய பள்ளியின் தாளாளர் முகமது யூசுப், “இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் ஆங்கில உரிச்சொற்றொடர் புலமையும், ஆங்கில சொற்கோவையில் நல்ல மொழித் திறமைகளும் மேம்பட உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார். நீண்ட நேர ஆங்கில சொற்கோவை மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்த நிலையில், அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இதையும் படிங்க: "விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படும்" -ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!