ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மாதத்தில் பாஜக 25% வாக்குகளை கடந்துவிடும்: அண்ணாமலை நம்பிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 12:24 PM IST

நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் படி பாஜகவிற்கு 20 சதவீத வாக்குகள் என்ற இடத்தில் உள்ள நிலையில், ஒரு மாதத்தில் 25 சதவீத வாக்குகளை தாண்டி விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கருத்துக்கணிப்புகள் படி பாஜக ஒரு மாதத்தில் 25 சதவீத வாக்குகளை தாண்டி விடுவோம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு காவல்துறையை வைத்து வலுகட்டாயமாக தங்க நாற்கர சாலையில் உள்ள கடைகளை அடைக்க வைத்து, மின்சாரத்தை துண்டிக்க வைத்து, பாஜக பொதுக் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது எனவும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருந்தது.

இது போல் தமிழ்நாட்டில் நடக்குமா என தேசிய தலைவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இதை எல்லாம் தாண்டி பொதுக் கூட்டத்திற்கு மக்கள் வந்தார்கள். இதனால் தனது மேடையில் ஜெ.பி.நட்டா கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இதையெல்லாம் தாண்டி தான் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் என மனதளவில் தயாராகி விட்டோம். திமுகவின் தோல்வி பயம் தெரிகிறது.

திமுக காவல்துறையை ஏவி விட்டு தான் சண்டை போடுவார்கள். காவல்துறையுடன் உரசல் வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு. சென்னை எம்.பிக்கள் குடும்ப அரசியலின் இலக்கணமாக இருக்கிறார்கள். சாமானிய மக்களின் பிரச்சனைகள் பற்றி புரிதல் கிடையாது. மக்கள் சாலைக்கு வந்து விட்டால் புரட்சி நடக்கும் என திமுகவிற்கு தெரியும்.

சென்னையில் மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே தேசிய தலைவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். கூட்டணி கட்சி தலைவர்கள் அன்பின் அடிப்படையில் வரவேற்க வந்திருந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்கிறார் (எடப்பாடி பழனிசாமி). கூட்டணியில் இல்லை என்பதால் மேற்கொண்டு பேச என்ன இருக்கிறது.

நாடாளுமன்ற தொகுதிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு நட்டா, அமித்ஷா வந்து விட்டார்கள். பெரிய தலைவர் வருகிறார் என்றால் போகாத தொகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். சென்னையில் எல்லா எம்.எல்.ஏ.க்களும் மோசமாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ எழிலரசனை மக்கள் கேள்வி கேட்டார்கள். அமைச்சர் சேகர்பாபுவிற்கும் அதே பிரச்சனை தான். யாத்திரையில் நான் பேசியதை கேட்டால் அரசியல் எதை நோக்கி போகிறது என்று புரியும்.

கூட்டணி என்பது வியாபார சந்தை கடை கிடையாது. திமுகவை அகற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 400 எம்.பிக்களை தாண்டி மோடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும். கூட்டணி குறித்து யார் எங்கு பேச வேண்டுமோ, யாரிடம் பேச வேண்டுமோ எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் வெளியானதில் பாஜகவிற்கு 20 சதவீத வாக்குகள் என்ற இடத்தில் இருக்கிறோம்.

ஒரு மாதத்தில் 25 சதவீதத்தை தாண்டி விடுவோம். ஒட்டுகள் வாங்குவது தான் முக்கியம். எத்தனை இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தற்போது கணிக்க முடியாது. தமிழ்நாடு முதன் முறையாக கடுமையான மும்முனை போட்டியை சந்தித்திருக்கிறது. கருத்து கணிப்புகளும் மும்முனை போட்டிகளின் அடிப்படையில் தான் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி வளர்ந்து வருவதாக கருத்து கணிப்புகள் கூறுவது வரவேற்கத்தக்கது.

சிறுபான்மை, பெரும்பான்மை என திட்டத்தை செயல்படுத்தும் போது முடிவு எடுக்க கூடிய ஆள் பிரதமர் மோடி கிடையாது. இந்தியாவில் இருக்கக் கூடிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமையை பறிக்கப் போவதில்லை. புதிதாக தரப் போகிறோம். குடியுரிமையை பறிக்க கூடிய அதிகாரம் அரசுக்கே இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி யாராலும் குடியுரிமையை பறிக்க முடியாது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகை! கூட்டணி பேச்சுவார்த்தையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.