ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு - MHC Chief justice KR Shriram

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணிபுரிந்து வந்த கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இன்று(வெள்ளிக்கிழமை) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பணி ஓய்வுபெற்றதை அடுத்து, நீதிபதி ஆர். மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதி யாக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 34வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம், 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்று, 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.