ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போல் சிலம்பத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல தமிழ்நாடு அரசு சிலம்பப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ரபீக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:36 AM IST

ஜல்லிக்கட்டு போல சிலம்பப் போட்டிகளுக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

திருச்சி: சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர். திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பப் பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். அதில் இரண்டு மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்தார்கள். அதன் அடிப்படையில் தாய்லாந்தில் ஜனவரி 26, 27 என இரண்டு நாட்கள் உலக அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் சேர்ந்த வீரர்கள் ஒற்றைக் கம்பம், இரட்டைக் கம்பம், சண்டை பயிற்சி, போன்ற சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது இர்பான், முகமது சல்மான், முகமது ஹர்ஷத் ஆகிய மூன்று மாணவர்கள் உலகளாவிய சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.10க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்: விவசாயிகள் வேதனை..!

இதனையடுத்து நேற்று திருச்சி ரயில்வே நிலையம் வந்த மூன்று மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ரபீக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய சிலம்பப் போட்டியை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்போது விளையாட்டு நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல தமிழ்நாடு அரசு சிலம்பப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: 'நிதிஷ்குமார் ஒரு சுயநலவாதி' - ஜவாஹிருல்லா காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.