சென்னை : சென்னை, அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான மாயவன் கூறுகையில், "மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம் என்ற பெயரிலே பள்ளிகளில் மத கருத்துக்கள், ஆன்மீக கருத்துக்களை எல்லாம் போதிக்கக்கூடிய தவறான, மோசமான வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.
தலைமை ஆசிரியர்களை ஏமாற்றி இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை. மாணவர்கள் தேர்விலே தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல் எண்ணத்தில் அனுமதித்தார்.
பள்ளியில் இருக்கக்கூடிய எஸ்எம்சி (school management committee) பரிந்துரையின் பெயரில், இந்த சொற்பொழிவு நடந்திருக்கிறது என தெரிய வருகிறது. ஆனால் இதை தலைமையாசிரியர் தடுத்து நிறுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு இது போன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் எந்த பள்ளியிலும் நடக்கக்கூடாது என்பதை உறுதியளித்திருக்கிறார்.
இந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம். இந்த சொற்பொழிவு தற்செயலாக நடைபெற்றுள்ளது. தலைமை ஆசிரியர் செய்தது தவறு என்றாலும், கடுமையான நடவவடிக்கை எடுக்காமல் தவிர்க்கலாம்" என தெரிவித்தார்.
இதனிடையே அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை.. ஆசிரியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! - Minister Anbil mahesh