ETV Bharat / state

வாலாஜாபேட்டையில் ரூ.1.31 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால குளம்.. திறப்பு எப்போது?

வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மிக பழமையான குளம் ரூ.1.31 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குளத்தை இம்மாதம் இறுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனரமைக்கப்பட்ட குளம் ட்ரோன் காட்சி
புனரமைக்கப்பட்ட குளம் ட்ரோன் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 12 hours ago

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மிக பழமையான குளத்தை புதுப்பிக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அந்த நடவடிக்கையின் காரணமாக, குளம் தூர்வாரப்பட்டு, 5 மீட்டர் ஆழத்திற்கு ஆழப்படுத்தப்பட்டு, மழைக்காலத்தில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளத்தைச் சுற்றி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக, சிறிய அளவில் விளையாட்டுத்திடலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் கொண்டு புனரமைக்கப்பட்டுள்ள இந்த குளத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் இறுதியில் திறந்து வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடைபாதை
நடைபாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து வாலாஜாபேட்டை பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது, "கடந்த 1890ம் ஆண்டு ஆற்காடு நவாப் என்பவரால் அதிக மழைநீரை தேக்கவும், பாசனத்திற்காகவும் இந்த குளம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, குடியிருப்பாளர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டது. இக்குளம் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.1.31 கோடி செலவில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது 5 மீட்டர் ஆழத்திற்கு மண் அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தூத்துக்குடி துறைமுகத்தை அடைந்த இந்திய ஆளில்லா ரோந்து கப்பல்! வரவேற்ற அதிகாரிகள்..

குளத்தின் சுற்றுப்புறத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்வர்களின் வசதிக்காக, நடைபாதையில் 12 கான்கிரீட் இருக்கைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குளத்தின் தோற்றம்
குளத்தின் தோற்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியில், சீசாக்கள் மற்றும் சறுக்கு மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சூரிய சக்தி மூலம் இயங்கும் எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குளத்தைச் சுற்றி இரும்பு கம்பிகள் மூலம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, குளத்திற்கு செல்லும் படிகள் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு, பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குளத்தைச் சுற்றி கொய்யா, நாவல், இழுப்பை, மா, நெல்லிக்காய் போன்ற நாட்டு பழ மரங்கள் மற்றும் தாவர இனங்களின் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இக்குளத்திற்கு பொழுதுபோக்குக்காக ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளை அதிக அளவில் ஈர்க்கும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.