ETV Bharat / state

முதல்முறையாக சிறைக்கு வருபவர்களை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? அரசுக்கு நீதிபதி கேள்வி! - High Court Madurai Bench - HIGH COURT MADURAI BENCH

குற்ற வழக்குகளில் முதல்முறையாக சிறைக்கு வருபவர்களை தனியாக வைப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
மதுரை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 3:57 PM IST

மதுரை: மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் சில மனுக்களை விசாரணை செய்த போது போன மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இவர்களுக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டாவது குற்றவாளியாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இதுகுறித்து விசாரணை செய்தார். அப்போது சில அதிர்ச்சியான தகவல் வெளியானது.

அதாவது குற்ற வழக்குகளில் முதல்முறையாக கைது செய்யப்படுபவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்படும்போது, ஏற்கெனவே தொடர் கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களோடு தொடர்பு ஏற்பட்டு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இது குறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமாரை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனையடுத்து இன்றைய விசாரணையின்போது, சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்பொழுது சிறைத்துறை டிஐஜி பழனி குமார் "நீதிமன்றத்தில் முதல் குற்றவாளிகளை வயது வாரியாக பிரித்து மதுரை சிறையில் வைத்து வருகிறோம்" என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, "முதல்முறையாக சிறைக்கு வருவோரை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? தண்டனை பெற்ற குற்றவாளிக்கு தனியாக வைக்க வேண்டும். தற்போது ஒன்றாக வைக்கும்போது பழைய குற்றவாளிகளுடன் இணைந்தது தொடர் குற்றவாளியாக மாறிவிடுகின்றன என்றார்.

மேலும் தற்போது தாலுகாவில் உள்ள துணை சிறையில் வைக்க ஏற்பாடு செய்யலாம். இதில் கஞ்சா குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும். முதலில் சிறு வழக்கில் சிறை செல்கிறவர்கள் அங்கே உள்ள மொத்த வியாபாரியிடம் பழகி பெரும் குற்றவாளியாக ஆக மாறிவிடுகின்றான்.

எனவே இளைஞர்களை பாதுகாக்கும் விதமாக தமிழகம் முழுவதும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருபவர்களைத் தனியாக அடைக்க அரசு தரப்பில் ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். அவ்வாறு இருந்தால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்." எனக் கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பொதுமக்களையும் போலீசையும் இணைத்து வாட்ஸ் அப் குழுக்கள் - அசத்தும் மதுரை மாநகர போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.