ETV Bharat / state

குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர்சிபி! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே? ஒரே நாளில் 2 போட்டிகள்! - IPL 2024

IPL Match Today: இன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

IPL Match Today
IPL Match Today
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 1:50 PM IST

சென்னை: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோத உள்ளன.

GT Vs RCB : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்க உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 5-ல் தோல்வி 4-ல் வெற்றி எனப் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறக்கூடிய போட்டி மட்டும் அல்ல, இனி வரக்கூடிய போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற குஜராத் அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 போட்டிகளில் விளையாடி 7 தோல்வி 2-ல் வெற்றி என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? பெங்களூரு என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

CSK vs SRH: அதேபோல், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4-ல் வெற்றி 4-ல் தோல்வி எனப் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிஎஸ்கே மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். முன்னதாக, லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும் எனத் தெரிகிறது.

இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி, கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் ஹைதராபாத் அணி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு வெற்றி பெற்றதில்லை. இந்த சோகமான வரலாற்றை மாற்றியமைக்குமா? பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான்? எல்எஸ்ஜியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபரா வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.