ETV Bharat / state

தேனி பாஜகவினரின் போஸ்டர் மோதல்.. உட்கட்சி பூசலா? - Theni Bjp poster

Theni BJP poster issue: "நீக்கிவிடு நீக்கிவிடு வசூல் மன்னனை நீக்கிவிடு" என பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கக் கோரி பாஜகவினர் சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேனி பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி பாஜக
தேனி பாஜக
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:15 PM IST

தேனி: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேதி அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக, கட்சி நிர்வாகிகளிடம் உள்ள அதிருப்தியை காட்டுவதற்கு பல்வேறு கட்சிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவது தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் புகைப்படத்துடன் ஒட்டிய சுவரொட்டிகள் பேசுபொருளாக மாறி வருகிறது.

அதில், "நீக்கிடு வசூல் மன்னன் ராஜபாண்டியை நீக்கிடு", "தூண்டாதே தூண்டாதே போராட்டத்தை தூண்டதே" என்றும், எதிர்கட்சிக்கு விலை போனதும் தொண்டர்களின் தலையை அடகு வைக்கும் வசூல் மன்னன் ராஜபாண்டியை (மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) தேனி பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததை கண்டித்தும், இவருக்கு துணையாக உள்ளதாக கூறப்படும் முன்னாள் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் மற்றும் முன்னாள் கோட்ட பொறுப்பாளர் காதலின் நரசிங்க பெருமாள் உள்ளிட்டோரை நீக்கக் கோரி பெரியகுளம் நகர் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மத்தியில் கோஸ்டி மோதல்கள் இருந்து வருவதாக அறியப்படும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் தொடங்கிய உட்கட்சி பூசலால் தேனி பாஜகவில் குழப்பங்கள் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு! ஏற்றுமதி தரவுகள் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.