ETV Bharat / state

சட்ட விரோதமாக சிம் கார்டு விற்பனை.. சென்னை தனியார் கால் சென்டரில் அதிரடி சோதனை! - chennai call center raid - CHENNAI CALL CENTER RAID

Chennai call center raid: சட்ட விரோதமாக சிம் கார்டுகளைப் பயன்படுத்தியது தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட சிம் கார்டுகள்
கைப்பற்றப்பட்ட சிம் கார்டுகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 8:39 PM IST

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கால் சென்டரில் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83 (Sim Tools Box), மானிட்டர், CPU கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் சென்டர் உரிமையாளர் உட்பட இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையம், கிரீம்ஸ் ரோடு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில், தனியார் கால் சென்டர் (Call Center) நிறுவனம் கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கன்னிராஜ் ஆவார். இந்நிறுவனத்தில் சுமார் 800 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனம், முன்னணி தனியார் வங்கிகளில் வாங்கிய கிரெடிட் கார்டு (Credit card) லோன் மற்றும் தனிநபர் லோன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துமாறு கூறுவார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செல்போனில் பயன்படுத்தக்கூடிய சிம் கார்டுகளை சிம் டூல் பாக்ஸில் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் செயல்பட்டதாக வோடபோன் நிறுவனத்தின் நோடல் அதிகாரி பிரபு என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மத்திய உளவுத்துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறை குழுவினர், சென்னையில் உள்ள கால் சென்டரில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல் உதவி ஆணையாளர் தலைமையில் வந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர் மற்றும் CPU ஆகியவற்றைக் கைப்பற்றினர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து கால் சென்டர் உரிமையாளர் கன்னிராஜ், பொறுப்பாளர் உமாபதி ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்காதீர்கள்..” அன்பில் மகேஷ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.