ETV Bharat / state

பணத்தை வெளியே எடுத்துச் செல்பவரா நீங்கள்? ஆந்திர கும்பலை சுத்துப்போடும் தமிழக போலீஸ்! - Money Theft Andhra Gang - MONEY THEFT ANDHRA GANG

Money theft: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டுள்ளனர்.

பணத்தை திருடிய நபரை கைது செய்த புகைப்படம்
பணத்தை திருடிய நபரை கைது செய்த புகைப்படம் (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 9:33 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கணேசன் (39). இவர் கடந்த மே 2ஆம் தேதி வங்கியில் நகைகளை அடகு வைத்து, ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார்.

அதன்பின், அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்தை வாங்கிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுக்கையில், டேங்க் கவரில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன், இது குறித்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, பணத்தை எடுத்துச் சென்ற நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இதேபோல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் போது ஒருவரிடம் திருடியதை அப்பகுதி போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

அச்சம்பவத்தில் ஆந்திர மாநிலம் நெல்லுர் தாமாவரம் திப்பா காலனியைச் சேர்ந்த அவுலா ராகேஷ் (26) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த நபர், திருப்பத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது. அதேபோல், திருடிய பணத்தை திருச்சி பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அந்த இடத்தில் இருந்த பணம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணையில் ஆந்திராவிலிருந்து ஒரு கும்பல் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், அந்த கும்பலின் தலைவன் திட்டம் போட்டு கொடுத்து, குறைந்த விலையில் இருசக்கர வானத்தை வாங்கி, அதன்பின் வங்கிகளுக்குச் சென்று அங்கு பணம் எடுத்து கவனக்குறைவாக உள்ளவர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் கைவரிசை காண்பிப்பதும் இந்த கொள்ளை கும்பலின் நோக்கம் என தெரிய வந்துள்ளது. தற்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அலறும் நெல்லை.. யார் இந்த தீபக் ராஜா? முக்கிய புள்ளியாக உருவானது எப்படி? - Who Is Nellai Deepak Raja

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.