ETV Bharat / state

“தற்போது இருக்கின்ற அரசியல்வாதிகளில் புத்திசாலி எடப்பாடி பழனிச்சாமி தான்”- சீமான் பேச்சு! - NTK Seeman About EPS - NTK SEEMAN ABOUT EPS

NTK Seeman About EPS தற்போது இருக்கும் அரசியல்வாதிகளிலேயே புத்திசாலி எடப்பாடி பழனிச்சாமி தான்; அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்தவர். அவரை தற்குறி என்று அண்ணமலை கூறக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாதக  ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 10:00 PM IST

திருச்சி: திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பு மறு சீராய்வு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்கான கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், “ திருச்சி எஸ்பி வருண்குமார் ஐ.பி.எஸ் படித்திருக்கிறார் என்றால் அந்த வேலையை தான் அவர் பார்க்க வேண்டும்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் (Credits- ETV Bharat Tamil Nadu)

தி.மு.க விற்கு வேலை பார்க்க விரும்பினால் அவர் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.கவின் ஐ.டி விங்கிற்கு வேலைப்பார்க்கட்டும். என் குடும்பத்தையும் பலர் இழிவுப்படுத்தினார்கள். அதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பார்கள். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமாரும், அதன் அருகில் உள்ள மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரது மனைவி வந்திதா பாண்டேவும் பணியில் சேர்ந்தது எப்படி? காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தும் நபராக எஸ்பி வருண்குமார் இருக்கிறார்.

தமிழர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோருக்கு இணை அமைச்சர் பதவி வழங்காமல் எல்.முருகனுக்கு பதவி வழங்கியது ஏன்? தமிழர்கள் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி தலைவராக இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்ட சைலேந்திரபாபுவை நிராகரித்த ஆளுநர், பிரபாகரின் நியமனத்திற்கு மட்டும் ஒப்புக்கொண்டது எப்படி?

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் பணியாற்றியவர் பிரபாகர். அதற்கு பிராயசித்தமாக தான் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இவரை நியமிப்பதன் மூலம் தமிழர்கள் யாருக்கும் அரசு வேலை கிடைக்காத நிலை ஏற்படும். திமுக- பாஜக கள்ள உறவு என்றெல்லாம் கிடையாது, இருவரும் ஒன்றுதான், அதான் முதலமைச்சர் இந்து, ஆர்எஸ்எஸ், பாஜக என 90 சதவீத மக்கள் இந்துக்கள் என கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் பேசியதும் துரைமுருகன் பேசியதும் நகைச்சுவைக்காகத்தான். தற்பொழுது இருக்கிறவர்களிலேயே புத்திசாலி எடப்பாடி பழனிச்சாமி தான் அவரை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக்கூடாது. அவர், அண்ணாமலை போல ஆளுங்கட்சியாக உள்ள கட்சிக்கு தலைவராகவில்லை.

அடிப்படை உறுப்பினரில் இருந்து, படிப்படியாக உயர்ந்து வந்தவர். அவர் தற்போதைய ஆட்சியை விட மிக சிறப்பான ஆட்சியை கொடுத்தவர், அவர் ஒன்றும் கார் பந்தயம் விட்டவர் இல்லை. தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளித்தவர். வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். இதுவரை 50, 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார் செய்து விட்டோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.