சென்னை: தங்கம் என்பது அழகையும், ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பொருளாக இருப்பதைவிட சாமானிய மக்களின் சேமிப்பு பொருளாக உள்ளது. மேலும், தங்கம் வாங்குவது சாமானிய மக்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை இன்றும் ஏற்றத்தைக் கண்டிருக்கிறது.
தங்கத்தின் விலையை சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தங்கத்தின் விலை நேற்றை விட உயர்ந்துள்ளதால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை: இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை நேற்றை விட 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6,740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை இன்று மீண்டும் ரூபாய் 100-ஐத் தாண்டியுள்ளது. நேற்றைய விலையை விட ரூபாய் 3.50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூபாய் 101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏன்? - தமிழக அரசு விளக்கம்!