ETV Bharat / state

போட்டானிக் பிராசசர் சிப்புகள் உருவாக்கம்.. மலேசியா சில்டெராவுடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்! - IIt Madras - IIT MADRAS

IIt Madras: சென்னை ஐஐடி சிலிக்கான் போட்டானிக்ஸ் உயர்சிறப்பு மையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட புரோகிராம் செய்யக்கூடிய போட்டானிக் பிராசசர் சிப்புகளை உருவாக்க மலேசியாவின் சில்டெரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மலேசியாவின் சில்டெரா நிறுவன அதிகாரிகள் கோப்புப்படம்
மலேசியாவின் சில்டெரா நிறுவன அதிகாரிகள் கோப்புப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 6:25 PM IST

சென்னை: புரோகிராம் செய்யக்கூடிய சிலிக்கான் போட்டானிக் பிராசசர் (Photonic Processor) சிப்கள் கூட்டு மேம்பாட்டிற்காகவும், குறிப்பாக, குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு நிலை பயன்பாடுக்காகவும் இந்த கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நவீன சிலிக்கான் போட்டானிக் சாதனங்கள் மற்றும் சர்க்யூட்கள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்வது இந்த கூட்டு முயற்சியின் முக்கிய அம்சமாகும். தரவு மையங்கள், உயர் செயல்திறன் மிகுந்த கணினிகள் மற்றும் ஏஐ (AI), எம்எல்-இல் பயன்படுத்தும் விதமாக ஆற்றல் திறன் கொண்ட அதிவேக இன்டர்கனெக்ட் தீர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சில்டெரா (Silterra): சில்டெரா மலேசியா Sdn Bhd, உலகளாவிய செமிகண்டக்டர் பவுண்டரியாகும். இந்நிறுவனம் தனது சிலிக்கான் போட்டானிக்ஸ் தொழில்நுட்பம் (Silicon Photonics Research Centre of Excellence) மூலம் அதிநவீன செமிகண்டக்டர் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் உள்ள சிலிக்கான் போட்டோனிக்ஸ் CoE-CPPICS ICS குழு, சிலிக்கான் போட்டானிக்ஸ் செயல்முறை வடிவமைப்பு கருவியை சில்டெரா சிலிகான் போட்டானிக்ஸ் பவுண்டரிக்கு தனது ஆதாரங்களின் வாயிலாக மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் இருதரப்புக்குமிடையே பரஸ்பரம் ஏற்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்த இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடியின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி பேராசிரியர் மனு சந்தானம் மற்றும் சில்டெரா மலேசியா Sdn Bhd நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆல்பர்ட் பாங் சூ கூன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறுகையில், “உயர் செயல்திறன் கொண்ட சிலிக்கான் போட்டானிக்ஸ் தொழில்நுட்பத் தீர்வுகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான திறவுகோலாக இவை அமைந்துள்ளது. அதிநவீன வர்த்தக செமிகண்டக்டர் பேப்ரிகேஷன் வசதிகளை நிறுவுவதை நோக்கி நாடு முன்னேறும் நிலையில், ஆராய்ச்சி மற்றும் மனிதத் திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்கால தொழில்நுட்பங்களில் அதன் இலக்கை எட்டுவதற்கு இந்த ஒத்துழைப்பு உதவிகரமாக இருக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

சிலிக்கான் போட்டோனிக்ஸ் தலைமை ஆய்வாளரும்,சென்னை ஐஐடி மின்பொறியியல் துறையின் ஆசிரியருமான பிஜோய் கிருஷ்ணதாஸ் கூறுகையில், “இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) நிதியுதவியுடன், கடந்த 2021 ஜனவரியில் சென்னை ஐஐடியில் நிறுவப்பட்ட சிலிக்கான் போட்டோனிக்ஸ் மூலம் லட்சியங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற உதவும்.

சில்டெராவின் 200 மி.மீ. பவுண்டரியின் தலைசிறந்த சிலிக்கான் போட்டமானிக்ஸ் செயல்முறை தொழில்நுட்பம், சிலிக்கான் போட்டானிக்ஸ் வேபர் அளவிலான சோதனை வசதிகள், சாதனங்களின் வடிவமைப்பு, மிகத் துல்லியமான மாடலிங், சர்க்கியூட் சிமுலேஷன் நிபுணத்துவம் போன்றவைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிலிக்கான் போட்டோனிக்ஸ் குழுவினரால் அணுகப்படும்.

இதன் மூலம் வலுவான, மேம்படுத்தப்பட்ட புரோகிராம் செய்யக்கூடிய போட்டானிக் பிராசசர் சிப்புகளை உருவாக்க முடியும். ஐபி உருவாக்குதல், தொழில்முனைவுக்கான இந்த தனித்துவமான வாய்ப்பை அவர்களால் பயன்படுத்திக் கொள்ள இயலும். எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய செமிகண்டக்டர் மிஷன் (ISM) மற்றும் தேசிய குவாண்டம் மிஷன் (NQM) தொடர்பான இந்தியாவின் கனவுத் திட்டங்களுக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரீமால் புயல்: 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை! - REMAL STORM WARNING

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.