ETV Bharat / state

"விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin - UDHAYANIDHI STALIN

என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின்
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 1:33 PM IST

Updated : Sep 29, 2024, 1:49 PM IST

சென்னை: துணை முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்க உள்ளார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனை முன்னிட்டு அண்ணா, கலைஞர், பெரியார் உள்ளிட்ட நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,”துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்பதற்கு
பல்வேறு தரப்பினர் நேற்று இரவு முதலே வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன். துணை முதலமைச்சர் என்பது பதவி கிடையாது கூடுதல் பொறுப்பு.

எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளருக்கு நன்றி. விமர்சனங்களை உள்வாங்கி அதிலே ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்து கொள்வேன்.

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளார்கள் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

நான் திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற முதல் அமைச்சராக பொறுப்பேற்றது வரை பல்வேறு விமர்சனங்கள் வந்தது. இந்த விமர்சனங்களை நான் பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும். விமர்சனம் என்றால் வரத் தான் செய்யும் அதனை நான் உள்வாங்கிக் கொண்டு முறையாக செயல்படுவேன் என்றார். மேலும் புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் கடந்து வந்த பாதை!

தமிழக அமைச்சரவையில் 3வது முறையாக மாற்றங்கள் இருக்கும் என கடந்த சில தகவல்கள் பரவி வந்தது. முதல்வர் ஸ்டாலினும் அமைச்சரவை 'மாற்றம் விரைவில் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது' என்று கூறியிருந்தார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்தன அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் மனோ தங்கராஜ் , ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Sep 29, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.