ETV Bharat / state

தம்பியுடன் பழக்கம்.. காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. எண்ணூரில் பகீர் சம்பவம்! - husband kills wife - HUSBAND KILLS WIFE

Wife affair with brother: எண்ணூர் அருகே தம்பியுடன் திருமண உறவை மீறி பழக்கம் வைத்திருந்ததாகக் கூறி மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband and wife
கணவர் மனைவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 5:11 PM IST

சென்னை: சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், பிரேம்குமார் எண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தச் சூழலில், ராஜ லட்சுமி பிரேம் குமாரின் தம்பி ரமேஷ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதை பிரேம்குமார் பலமுறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜலட்சுமி அந்த பழக்கத்தை விடாமல் பிரேம் குமாருக்கு போக்கு காட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 18வது தெருவில் ராஜலட்சுமி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் பிரேம்குமார், குடிபோதையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து ராஜலட்சுமியின் கழுத்து, தலை, விலா எலும்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் போலீசார், ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: செல்போன் பேசியபடி கார் ஓட்டிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.