ETV Bharat / state

எல்லை தாண்டிய இன்ஸ்டாகிராம் மோகம்.. மனைவியைக் கொலை செய்த கணவர் - தாய்மாமன்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Husband killed wife in Thoothukudi - HUSBAND KILLED WIFE IN THOOTHUKUDI

Husband brutally hacked wife: இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட மனைவியை கணவர் கண்டித்துள்ளார். இதனால் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, நேற்று கணவர், மனைவியின் தாய்மாமாவுடன் இணைந்து மனைவியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கணவர் மற்றும் தாய்மாமா புகைப்படம்
கணவர் மற்றும் தாய்மாமா புகைப்படம் (Credits - ETV bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:30 PM IST

Updated : May 5, 2024, 6:59 PM IST

தூத்துக்குடி: எட்டையாபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பட்டதாரியான இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான சந்தன மாரியம்மாள் என்பவருக்கும், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பாலமுருகன் சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து, மனைவி சந்தன மாரியம்மாளை அழைத்து சிங்கப்பூர் சென்று, அங்கேயே பாலமுருகன் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி கிருபை நகரில் பாலமுருகன் தனது பெயரில் ஒரு இடத்தை வாங்கி, அதில் வீடு கட்டி சந்தன மாரியம்மாளுடன் குடியிருந்து வந்துள்ளார்.

அதன்பின், தூத்துக்குடியிலுள்ள சொந்த வீட்டில் சந்தன மாரியம்மாளை தங்க வைத்து, பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அங்கு வேலை பார்த்து பணத்தை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.

மேலும், பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து மனைவிக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் 50 பவுன் தங்க நகை கொடுத்துள்ளார். இந்நிலையில், சந்தனமாரிக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கைத் துவங்கி, அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, பல ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, வெளிநாட்டு வேலையை விட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலமுருகன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மனைவியிடம் தனது மருத்துவச் செலவுக்காக, தான் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை என்ன செய்தாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சந்தன மாரியம்மாள் உரிய பதிலளிக்காமல், நகை மற்றும் பணத்தைத் தர மறுத்துள்ளார்.

மேலும், சந்தன மாரியம்மாள் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தததாக பாலமுருகன் கண்டித்துள்ளார். இதனால் கணவர் - மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சந்தன மாரியம்மாள் ஏற்கனவே தாய்மாமனான காளிமுத்துவிடம் இதேபோன்று நகைகளை வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தன மாரியம்மாளுக்கும், காளிமுத்துக்கும் தகராறு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சந்தன மாரியம்மாளின் தம்பி காளிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்த நிலையில், பாலமுருகன் மற்றும் சந்தன மாரியம்மாளின் தாய்மாமா காளிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து, சந்தன மாரியம்மாளை தீர்த்து கட்ட எண்ணி, நேற்று இரவு (மே 4) கிருபை நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து வெளியே வந்த சந்தன மாரியம்மாளை, கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பாலமுருகன் மற்றும் காளிமுத்து ஆகியோர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த கொலை சம்பவத்தில் மனைவியை வெட்டும் போது பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டதால் போலீசார் பாலமுருகனை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "முகத்தின் முன் துப்பாக்கியை நீட்டிய ED.. கண் கலங்கினேன்" - இயக்குனர் அமீர் பேச்சு! - Director Ameer

Last Updated : May 5, 2024, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.