தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்ரா பௌணர்மியை முன்னிட்டு நேற்று சாமி தரிசனம் வந்த ஆயிரணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால், தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் சண்முக விலாஸ் மண்டபம் முன்பு வைக்கப்பட்ட பேரிகார்டை தள்ளிவிட்டு உள்ளே புகுந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் சுவாமி கோயில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால், நாளொன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை சித்திரா பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - Chitra Pournami Girivalam
இதனால், கோயில் சண்முக விலாச மண்டபம் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்ட பேரிகார்டை தள்ளிவிட்டு சண்முக விலாஸ் மண்டபத்திற்குள் நுழைந்தனர். அப்போது கோயில் காவலர்கள், போலீசார், பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சித்ரா பௌர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றி வரும் பக்தர்களுக்கு தனி வரிசை அமைத்து தர வேண்டும். இது மாதிரியான பக்தர்கள் அதிக அளவில் வரக்கூடிய விசேஷ நாட்களில் கூடுதலாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.20 பட்ஜெட்டில் அறுசுவை சாப்பாடு! ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறை அசத்தலான ஏற்பாடு..! - Southern Railway