திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் நடந்து சென்று, ஓம் நமச்சிவாய என்ற முழக்கமிட்டபடி கிரிவலம் சென்று சாமி தரசினம் செய்தனர்.
மேலும், நேற்று (வெவ்வாய்கிழமை) அதிகாலை 4.30 மணியிலிருந்து கோயிலின் ராஜகோபுரம் வாசலில் இருந்து நீண்ட வரிசையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியது, புற்றீசல் நகர்வது போல் காணப்பட்டது.
இதினிடையே, கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் குடிநீர், மருத்துவம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிரிவலப்பாதை முழுவதும் அங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை பொருத்தவரை மாதந்தோறும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
குறிப்பாக கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மகா தீபத்தை கண்டு, கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் சித்திரை மாதத்தில் நிகலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலை நகருக்குள் வரும் 9 பிரதான சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: களைகட்டிய தேனி கண்ணகி கோயில்.. சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்!