ETV Bharat / state

சென்னையில் ஒரே இரவில் மூன்று இடங்களில் சோதனையில்.. கிலோ கணக்கில் கஞ்சா, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்! - Ganja seizure in Chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 3:56 PM IST

Ganj seizure in Chennai: சென்னையில் ஒரே இரவில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 20 கிலோக்கு மேற்பட்ட கஞ்சா, ரூ.17 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் வாகனங்கள் உள்ளிடவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், நகரின் பல பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஓட்டேரி அடுத்த மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே நேற்று (சனிக்கிழமை) சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர், சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஓட்டேரியைச் சேர்ந்த அருள் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர், அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 17 லட்சத்து 29 ஆயிரத்து 60 ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் வேளச்சேரி ரயில் நிலையம் அருகே நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த நிசார் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலின் பேரில், நேற்று புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஹஜ் கட்டிடம் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த உஷா என்ற பானுமதி மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மியா என்ற ஆனந்தவள்ளி, அவரது மகள் மோனிஷா மற்றும் வீரா என்ற வீரராகவன் மற்றும் முகமது நசீர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 90 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட உஷா மீது 6 கஞ்சா வழக்குகளும், மியா மீது 9 கஞ்சா வழக்குகளும், வீரா என்ற வீரராகவன் மீது கஞ்சா மற்றும் அடிதடி உட்பட 11 வழக்குள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகள் பதியப்பட்டதில், 3 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 20.09 கிலோ கஞ்சா, ரூ.17 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தாய் யானையுடன் சேரும் முயற்சி தோல்வி... முதுமலை முகாமிற்கு சென்ற குட்டி யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.