ETV Bharat / state

பால்கனியில் தவித்த குழந்தையைக் காப்பாற்றியது எப்படி? குடியிருப்புவாசிகளின் திக் திக் நிமிடங்கள்! - Chennai baby rescue video - CHENNAI BABY RESCUE VIDEO

Residents saving a child fell an apartment: சென்னை ஆவடி அருகே அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய குடியிருப்புவாசிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

residents-saving-a-child-fell-from-an-apartment-near-aavadi-is-going-viral-on-internet
சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய பொது மக்கள் - வைரலாகும் வீடியோ!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 9:10 PM IST

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய பொது மக்கள் - வைரலாகும் வீடியோ!

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி. இந்த நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குழந்தை தாயின் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது.

அப்போது, அதிர்ஷ்டவசமாக முதலாவது மாடியில் பால்கனியின் சன்சைடு என சொல்லப்படும் சீட்டின் மீது குழந்தை விழுந்துள்ளது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, குடியிருப்பு வாசிகள் கீழே பெரிய அளவிலான பெட்சீட் வைத்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனி வழியாகச் சிலர் ஏறி, உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தை கை, கால்களில் சிறிய சிராய்ப்புக் காயங்களுடன் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “திடீரென சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்தபோது, குழந்தை ஒன்று மேற்கூரை மீது விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோம். மேலும், இதனால் பதறிப்போன குடியிருப்புவாசிகள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று குவிந்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றனர்.

குழந்தை கீழ்நோக்கி மெல்ல மெல்லத் தவழ்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையைக் காப்பாற்றும் வகையில் பெட்சீட், மெத்தையைப் போட்டு தயார் நிலையில் சிலர் காத்திருக்க, இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே மேலே ஏறி குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றினர்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் சிக்கிய பாகிஸ்தான் படகு! 14 பேர் கைது! - Gujarat Pakistan Drug Boat Seized

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.