ETV Bharat / state

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது? - 12th result

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 2:57 PM IST

TN 12th Result 2024: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு எழுதும் புகைப்படம்
மாணவர்கள் தேர்வு எழுதும் புகைப்படம் (CREDIT - ETV BHARAT TAMILNADU)

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், 3,302 மையங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.

இதனையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணியில், 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன் பின்னர், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசுத் தேர்வுத்துறை தயார் நிலையில் உள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 மார்ச் 12ஆம் வகுப்பு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதிவை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே அவர்கள் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம்! தலைவர்கள் மரியாதை - JAYAKUMAR FINAL RITES

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.