- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: ஆவடியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினரால் அரசுப் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட 15,000 போதை மாத்திரைகள் சிக்கியது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் குறித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, நேற்றிரவு (மார்ச் 18) சந்தேகத்திற்கு இடமாக வந்த இளைஞர்கள் இருவரைப் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், ஆவடி அருகே சோழவரம் பகுதியில் கிருஷ்ணாகாந்த் என்பவரிடம் மாத்திரை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, கிருஷ்ணா காந்த் வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார் மேற்கொண்ட சோதனையில், வீட்டில் விற்பனைக்காக பதுக்க வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 600 போதை மாத்திரைகளைக் கைப்பற்றி கிருஷ்ணகாந்த், ஹரிஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து மாத்திரைகள் மற்றும் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, எப்படி விற்பனை செய்கின்றனர், வேறு யாருக்காவது உடந்தை இருக்கின்றதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது முதல் செல்போன் வீச்சு வரை.. கோவையில் பிரதமர் ரோடு ஷோவில் நடந்தது என்ன?