தருமபுரி: தெற்கில் ஈரோட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் தனக்கு எல்லைகளாகக் கொண்டு பரந்து விரிந்து, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு மிகப்பெரிய மாவட்டமாக தமிழகத்திலிருந்தது சேலம் மாவட்டம். இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட அலுவலரைச் சந்திக்க வேண்டும் என்றால், அவ்வளவு எளிதான காரியமல்ல.
காமராஜர் வாக்குறுதி: தருமபுரிக்கு 1965ஆம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸின் சார்பில், தருமபுரி வடிவேல் கவுண்டரை வேட்பாளராக அறிவித்தது. அப்போது பரப்புரை மேற்கொண்ட காமராஜர், தருமபுரி நகரில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தால், சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி என தனி மாவட்டமாக உருவாக்கி, இந்தப் பகுதி மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தார்.
இதையும் படிங்க: வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தருமபுரி.. அரசை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
தருமபுரிக்கு வயது 60: தருமபுரியை தனி மாவட்டமாக அறிவித்து, 1965ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் தருமபுரிக்கு நேரில் வந்து புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, அரசு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த வகையில், தனி மாவட்டமாக உதயமாகி 59 ஆண்டுகளைக் கடந்து 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று (அக்.2) பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், தருமபுரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? என்றால், அதுமட்டுமில்லை என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
தனி மாவட்டமான கிருஷ்ணகிரி: தருமபுரி மாவட்டத்தை உருவாக்கியபோது, தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற அரசு உதவிக்கரம் நீட்டியது. அதனை அடுத்து பெங்களூருவுக்கு மிக அருகிலிருந்த ஓசூரில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தது. அவர்களுக்குத் தேவையான வசதிகளுடன் மானிய விலையில் நிலங்கள் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அரசு வழங்கியது. இதையடுத்து, தொழில் வளர்ச்சியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் முக்கிய வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்