ETV Bharat / state

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு: முக்கிய நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Chennai Special Court

Hijau Company Fraud Case: முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, ரூ.4,690 கோடி மோசடி செய்த வழக்கில், ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் சௌந்தரராஜன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து டான்பிட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hijau scam issue
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 4:38 PM IST

சென்னை: முதலீடுகளுக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் ரூ.4 ஆயிரத்து 620 கோடியைப் பெற்று ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, அந்நிறுவனத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிறுவனத்தின் இயக்குநர் சௌந்தரராஜன் என்பவர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தற்போது, இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.தனசேகரன் முன்பாக நடைபெற்றது. அப்போது சௌந்தரராஜன் தரப்பில், தானாக முன்வந்து சரணடைந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் என ரூ.96 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், புகாரை நிரூபிக்கும் வகையில் காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மனுதாரரின் வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனையடுத்து, காவல்துறை தரப்பில், சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16 ஆயிரத்து 500 பேர் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வெளிநாடு தப்பிச்செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாலும், மீட்க வேண்டிய தொகை அதிகம் உள்ளதால், தற்போது ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் சௌந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி சௌந்தரராஜனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் பிப்.26இல் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.