டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்வுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
முக்கிய அம்சங்கள்
- நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ.400 வழங்கப்படும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது;பழைய முறையே தொடரும்
- சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் உடனடியாக பதவியை இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்
- எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் ஒராண்டுக்குள் நிரப்பப்படும்.
- மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்; இதற்கான பணிகள் 2025ல் நடைபெறும்
- உணவு, உடை காதல் திருமணத்திற்கு கட்டுப்பாடு இல்லை
- ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
- உச்ச, உயர்நீதிமன்றங்களில் எஸ்.டி., எஸ்.சி பெண்களை நீதிபதியாக அமர்த்த நடவடிக்கை
- அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும்; இதனால் 14 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்
- 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்
- ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்
- முதியவர்கள், கைம்பெண், மாற்றுத்திறானாளிகள் பென்ஷன் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்
- 15 மார்ச் 2024க்குள் வாங்கப்பட்ட கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்; அரசே வங்கிகளுக்கு செலுத்தும்
- 21 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
- அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்பிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படும்
- தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்
- பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி முறை நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி 2.0 கொண்டுவரப்படும்
- எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை நிறைவேற்றப்படும்
- கரோனா காலங்களில் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்படும்
- பாஜகவின் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்
- ராணுவத்தில் இருக்கும் அக்னிபாத் திட்ட ரத்து செய்யப்படும்
- காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜம்மு காஸ்மிரீல் மாநில அந்தஸ்து வழங்கப்படும்
- மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்