ETV Bharat / state

தீபாவளி பண்டிகை: சென்னையில் போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கை என்ன? - கமிஷனர் அருண் முக்கிய அப்டேட்! - CHENNAI DIWALI TRAFFIC

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர் அருண்
ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர் அருண் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 5:16 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை தியாகராய நகர் மற்றும் பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சாலையில் நடந்து சென்று பாதுகாப்பு பணிகளை கவனித்ததோடு, மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண் கூறியதாவது; ''ரங்கநாதன் தெரு சுற்றிலும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 64 கேமராக்களும் எஃப்ஆர்எஸ் (FRS) என்று அழைக்கப்படும் FACE RECOGNISING SYSTEM கொண்டவை. கூட்டத்தை பயன்படுத்தி நெரிசலில் கொள்ளை அடிக்கும் கும்பலில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தான புகைப்படங்களை படம் பிடித்து காட்டும். மொத்தம் ஏழு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: "விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்து சீமான்பயப்படுகிறார்" - நாதக முன்னாள் நிர்வாகிகள் பகீர்!

சிறப்பு ஏற்பாடுகள்: தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அடையாள பட்டை வழங்கப்படும். குழந்தைகளை கூட்டத்தில் தவற விடாமல் பாதுகாக்க இந்த திட்டம் உதவும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டில் உள்ளதால் தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக, போக்குவரத்து நெரிசலை குறைக்க சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூன்று இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மெட்ரோ பணிகள், மழை நீர் கால்வாய் பணிகள் போன்ற வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதனால் தான் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். நெரிசலை குறைக்க காவல்துறையும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் தீபாவளி கொண்டாட, என்ன நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ள வேண்டுமோ அதற்கான பணிகளை காவல்துறை செய்து வருகிறது''. இவ்வாறு காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.