ETV Bharat / state

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி; குற்றால அருவி பகுதியில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணி தீவிரம்! - Warning loudspeakers at Courtallam - WARNING LOUDSPEAKERS AT COURTALLAM

High pitched warning loudspeakers at Courtallam Falls: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, அதிக ஒலி எழுப்பக்கூடிய அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குற்றால அருவியில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் புகைப்படம்
குற்றால அருவியில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் புகைப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 5:07 PM IST

தென்காசி: குற்றாலம் பகுதியில் முதல் முறையாக வெள்ளத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த சீசன் காலகட்டங்களின் போது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குற்றாலத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவும், மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், குற்றாலம் மெயின் அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் அருவிக்கரை பகுதியில் ஏற்கனவே அபாய சைரன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கின் சத்தத்தின் போது எச்சரிக்கை ஒழிப்பான் சத்தம் அதிக அளவு கேட்கும் வகையில், கூடுதலாக பெண்கள் உடை மாற்றும் பகுதி, வழிப்பாதை உள்ளிட்ட இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிக ஒலி எழுப்பும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்! - Old Courtallam Falls Bath Timing

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.