ETV Bharat / state

சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை நடத்த தமிழ் பல்கலைக்கழகத்துக்கு UGC அனுமதி உள்ளதா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Siddha certificate course

Siddha certificate course in Tamil university: சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை நடத்த UGCயிடம் உரிய அனுமதி பெற்றுள்ஷதா என்றும், அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரைக்க கூடாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை - கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 7:06 PM IST

மதுரை: தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தஞ்சாவூர் வல்லம் கொட்டாரத் தெருவில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். நான் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே, நான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது" என கூறினார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி, "தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது. இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சிறிய எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளோம் என கூறுவது, சிகரெட் கம்பெனி கூட தான் புகைபழக்கம் உடல்நலத்திற்கு கேடு, என சிறிய அளவில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா, இப்படிப்பை வழங்குவதற்கு UGCயிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதா, அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால், பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரைக்கக் கூடாது" என கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுவரை எத்தனை மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களுடன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.

இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.