ETV Bharat / state

"கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்" - உத்தபுரம் கோயில் விவகாரத்தில் நீதிபதி அதிரடி! - Uthapuram Temple Closed issue

Uthapuram Temple Closed issue: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலில் இரு சமுதாய மக்கள் பிரச்சனை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக கோயில் பூட்டி வைக்கப்பட்டு பூஜை நடக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்குச் சமம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 3:05 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் பழமையான முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டதால் இரு சமுதாய மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் இதுதொடர்பாக இரு தரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இரு சமுதாயத்தினரும் சமாதானமாக செல்வதாக தீர்மானித்தனர். அதில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலை நிர்வகிக்கவும், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலில் வழிபடவும் முடிவெடுத்தனர்.

இந்த சூழலில் கடந்த 2014ஆம் ஆண்டு இரு சமுதாயத்தினரிடையே மீண்டும் பிரச்சனை எழுந்தது. இதையடுத்து கோயில் பூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த ஜி.பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அண்மையில் பிறப்பித்த உத்தரவில், "இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்ச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், கோயிலுக்குள் உள்ள சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்.

குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது. ஆனால், இந்த வழக்கில் சாமிக்கு பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. ஆகையால் கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தபுரம் கோயிலை ஒரு சமுதாயத்தினர் மூடியுள்ளனர். இதில் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோயிலை மூடியதாக கூறப்படும், அந்த சமுதாயத்தினர் அந்த கோயிலைத் திறக்க வேண்டும் என ஏன் நீதிமன்றம் வர வேண்டும். அவர்கள் கோயிலைத் திறந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தால் நீதிமன்றம் வந்துள்ளனர்.

கோயில் நிலை குறித்த புகைப்படத்தை மனுதாரர் சமர்பித்திருந்தார். அதில் கோயிலானது மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம்காட்டி, எந்த கோயிலையும் பூட்டக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவையில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி? - வனத்துறை வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.