ETV Bharat / state

"அரசு ஆவணங்களை எரிக்க முயன்ற அதிகாரியின் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை" - காவல் துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி! - High court Madurai Bench - HIGH COURT MADURAI BENCH

High court Madurai Bench: தேனி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை எரிக்க முயன்ற நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு -  கோப்புப்படம்
உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 6:08 PM IST

மதுரை: தேனி மாவட்டம் திருமால்புரம் பஞ்சாயத்து தலைவர் கனிராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன், திருமால்புரம் பஞ்சாயத்தின் தலைவராக இருக்கிறேன்.

இதற்கு முன்பாக குமரேசன் என்பவர் திருமால்புரம் பஞ்சாயத்தின் செயலராக பணியாற்றிய நிலையில், பஞ்சாயத்து நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் பொறுப்பில் இருந்து 2022ஆம் ஜூலை மாதம் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில் குமரேசன், அருள் முருகன் மற்றும் மேனகா ஆகியோரோடு சேர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எரிக்க முயன்றார். இதுதொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்று கண்டமனூர்விலக்கு காவல்துறை துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்து வழக்கு (CSR) பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த தவறு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இது தொடர்பாக கண்டமனூர்விலக்கு காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கனிராஜா தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '2022 ஆம் ஆண்டு புகார் கொடுத்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து ஊராட்சி மன்ற செயலாளரே ஆவணங்களை எடுத்து எரித்துள்ளதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும் குற்றச்சாட்டிற்கு உள்ளான நபர் ஏற்கெனவே மற்றொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் உள்ளவர். இவ்வாறு உள்ள சூழலில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது எனக் கூறிய நீதிபதி, இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் அவர்களால் எளிதாக பயன்படுத்த முடிகிறதா? - அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.