ETV Bharat / state

“அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?”.. தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்! - Sarah Tucker College Salary pending

Assistant Professor Salary pending issue: திருநெல்வேலி சாரா டக்கர் கல்லூரியில் உதவி பேராசிரியர்களுக்கான சம்பள நிலுவை விவகாரத்தில், தமிழக அரசு இப்படி அற்பமான முறையீடுகள் செய்து விளையாடுவதா என கண்டனம் தெரிவித்து, ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
உயர்நீதிமன்றம் மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 3:01 PM IST

மதுரை: திருநெல்வேலி சாரா டக்கர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த 10 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற அமர்வு, 'தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான மோசமான விளையாட்டின் விளைவாக அற்பமான முறையீடுகள் இவை. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட சிலர் உதவிப் பேராசிரியர்களாக, அரசு அதிகாரியின் ஒப்புதலுடன் 2009-ல் நியமிக்கப்பட்டனர். திருநெல்வேலி மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர், 2009 ஜூன் 17 முதல் நியமனம் செய்யப்பட்டவர்கள், 2020 மார்ச் 1ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் வகையில் நிரந்தரப் பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், மறுநாளே சில காரணங்களுக்காக ஒப்புதல்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 2020-ல் சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் வழக்கு தாக்கல் செய்தனர். ஆனால், வழக்குகள் நிலுவையில் இருந்தபோது ஒப்புதலை திரும்பப்பெறும் உத்தரவை ரத்து செய்து சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

இதனை பதிவு செய்த உயர் நீதிமன்றம், சம்பளம் வழங்குவதற்கான பரிந்துரையை அரசுக்கு கல்லூரி சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 4 வாரங்களில் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் 2021-ல் உத்தரவிட்டு பைசல் செய்தது. தொடர்ந்து மனுதாரர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது.

அதனால் உதவி பேராசிரியர்கள், '2009 ஜூன் 17 முதல் நியமிக்கப்பட்ட தங்களுக்கு 2022 ஜூன் வரை சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு தனி நீதிபதியின் கீழ் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், "அரசிடமிருந்து சிறப்பு மானியம் பெறப்பட்டதும் சம்பள நிலுவை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தனி நீதிபதி மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்குனர், திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த பத்து மேல் முறையீட்டு மனுக்களும் தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள். இதுபோன்ற ஒரு முடிவு அரசால் எடுக்கப்படுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2009-ல் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நியமனம் 2020-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒப்புதலை ரத்து செய்து சம்பளத்தை மறுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அனுமதி ரத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

அதன் பிறகும் உதவிப் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. தற்போது தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதனால் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தள்ளுபடி செய்யப்படும் ஒவ்வொரு மேல் முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தொகையில் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ.25 ஆயிரத்தை உதவிப் பேராசிரியர்களுக்கும், மீதம் ரூ.25 ஆயிரத்தை சென்னை அடையாறு கேன்கேர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும்.

தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து தமிழக அரசு வசூலிக்கலாம். எதிர்காலத்திலாவது இது போன்ற மேல்முறையீடுகளை அரசு தாக்கல் செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த உத்தரவானது குறைந்தபட்சம் தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்" என்று உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சீர்காழி அருகே தனியார் பேருந்து பைக் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.