ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடியை தாண்டிய நீர்வரத்து.. 5வது நாளாக தொடரும் தடை! - Hogenakkal Falls - HOGENAKKAL FALLS
HOGENAKKAL FALLS : தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கு வினாடிக்கு 61 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருப்பதால் அங்குத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
Published : Jul 20, 2024, 9:00 AM IST
தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மற்றும் அதற்கு முன்தினம் காவிரி ஆற்றில் சுமார் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு அறுபதாயிரம் கன அடியாக வந்தடைந்தது. காலை 7 மணி நிலவரப்படி நீர்வரத்து 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடி ஆகவும் மாலையில் 50 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இன்று 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து நீர்வரத்து 61 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு பறந்து விரிந்து வெல்லக்காடாகக் காட்சி அளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. காவிரி ஆற்றின் ஒரு முனையிலிருந்து கொட்டும் தண்ணீர் மறு முனையில் பட்டு புகை உருவாகி ரம்மியமாக ஒகேனக்கல் காவிரி ஆறு காட்சியளிக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஐந்தாவது நாளாக ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி தனியார் மீன் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கு மேற்பட்ட பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம்!