ETV Bharat / state

ஓராண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை.. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சாதனை - மா.சுப்பிரமணியன் தகவல்! - Kalaignar Centenary Hospital - KALAIGNAR CENTENARY HOSPITAL

Kalaignar Centenary Hospital: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓர் ஆண்டில் புறநோயாளிகளாக 2 இலட்சத்து 21,434 பேரும், உள்நோயாளிகளாக 63,505 பேரும் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 2 ஆயிரத்து 179 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை (Credits - CM Stalin X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 12:30 PM IST

சென்னை: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 240.54 கோடி ரூபாயில் கட்டிடம் மற்றும் 146.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 இலட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.

உயர்சிறப்பு மருத்துவத்துறைகள்: இம்மருத்துவமனையில் இருதயவியல் மருத்துவத் துறை, இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத்துறை. நரம்பியல் மருத்துவத் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவப்பிரிவு, புற்று நோய் அறுவை சிகிச்சைப்பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவைச்சிகிச்சைத்துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, இரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை இரத்தநாள கதிரியல் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மருத்துவமனையில் சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், இரத்த வங்கி, கதிரியிக்கவியர் பிரிவு(CT.MRI. ULTRASOUND SCAN DIGITAL XRAY), இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன. மேலும், இருதய கேத்லேப், மூளை இரத்தநாள கேத்லேப், அதிதீவிர சிகிச்சை பிரிவு, 15 உயர்சிறப்பு அறுவை அரங்குகள் போன்ற மருத்துவ வசதிகள் உள்ளன.

பயன்பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை: இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டு முடிவில் புறநோயாளிகளாக 2 இலட்சத்து 21 ஆயிரத்து 434 பேரும், உள்நோயாளிகளாக 63 ஆயிரத்து 505 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 179 அறுவை சிகிச்சைகள், 521 ஆஞ்கியோகிராம், 6 ஆயிரத்து 968 டயாலிசிஸ், 7 இலசத்து 72 ஆயிரத்து 558 ஆய்வக பரிசோதனைகள், 7 ஆயிரத்து 247 சிடி ஸ்கேன்கள், 2 ஆயிரத்து 4 எண்டோஸ்கோப்பி, 10 ஆயிரத்து 168 எக்ஸ்ரே, 17 ஆயிரத்து 349 எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அதிநவீன 1.5 டெஸ்லா ஆட்டோ MRI- Double Baloon Endoscopy ஆகிய வசதிகள் துவங்கப்பட்டு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி 6.74 கோடி ரூபாய் செலவில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கட்டணப்படுக்கை பிரிவு (pay ward): இம்மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 70 தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டணப் படுக்கை பிரிவில் குளிர்சாதன வசதி, வெந்நீர் உபகரணத்துடன் கூடிய தனி குளியல் மற்றும் கழிவறைகள், நவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டில், அறையில் ஆக்சிஜன் மற்றும் மானிட்டர் உபகரணம், உடனிருக்கும் உறவினர் படுக்கும் சிறிய கட்டில் வசதி, செவிலியரை அழைக்கும் Nurse Call System ஆகிய வசதிகள் உள்ளன.

நவீன Modular அறுவை அரங்குகள்: இந்த Modular அறுவை அரங்களானது நரம்பியல், புற்றுநோய், இருதய அறுவை சிகிச்சை, இரத்த நாள அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் நோய் தொற்று நீக்கப்பட்டு நோயாளர்களுக்கு நோய் கிருமி தொற்று ஏற்படா வண்ணம் Laminar Air Flow என்னும் AC குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறுவை அரங்குகளாகும்.

மேலும் அறுவை அரங்குகளின் சுவர்கள் நோய் கிருமிகள் படியா வண்ணம் தனித்துவமான உலோகம் மற்றும் பூச்சுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மருத்துவமனையில் உள்ள அறுவை அரங்குகளில் பல்வேறு நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன அறுவை அரங்கு விளக்குகள், அறுவை அரங்கு டேபிள், மயக்க மருந்து அளிக்கும் உபகரணங்கள், மானிட்டர் கருவிகள், லேப்ராஸ்கோப்பி, ஸ்கேன் கருவிகள் அடங்கும். மேலும் இங்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் Heart lung Machine, துல்லியமான மூளை நரம்பியல், புற்றுநோய் மற்றும் கல்லீரல் செய்ய பயன்படும் CUSA (யூசா) எனப்படும் இயந்திரம், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்யேகமான 3D Operating Microscope மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் HIPEC உபகரணம் கொண்டு உயர்தர நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் 15 இலட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும் இந்த HIPEC அதிநவீன அறுவை சிகிச்சையானது தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இன்று திமுக முப்பெரும் விழா.. கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு! - DMK Mupperum Vizha

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.