ETV Bharat / state

"பைக்கை எடுக்கப் போனவரு திரும்பி வரல" - மெரினாவில் கணவரை பறிகொடுத்த இளம்பெண் கண்ணீர்!

சரியான பாதுகாப்பு வசதிகள் இருந்திருந்தால் என் கணவர் உயிர் பிழைத்திருப்பார். நிகழ்ச்சி முடிந்த பிறகு வாகனம் எடுக்க சென்றவர் தான்,திரும்பி வரவே இல்லை என உயிரிழந்த கார்த்திகேயனின் மனைவி சிவரஞ்சனி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மெரினா விமான சாகசத்தை காண திரண்ட கூட்டம், உயிரிழந்த கார்த்திகேயன், அவரது மனைவி சிவரஞ்சனி.
மெரினா விமான சாகசத்தை காண திரண்ட கூட்டம், உயிரிழந்த கார்த்திகேயன், அவரது மனைவி சிவரஞ்சனி. (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க பல லட்சக்கணக்கான மக்கள் நேற்று காலை திரண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் மெரினாவிலிருந்து மக்கள் வெளியேற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அப்போது, வெயிலின் தாக்கம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட தனிப்பட்ட மருத்துவ காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர்.

அவர்கள் சென்னையில் உள்ள வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்தவர்களில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனும் (34) ஒருவர். தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த இவர், தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் நேற்று காலை, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

கார்த்திகேயனின் மனைவி சிவரஞ்சனி, உறவினர்கள் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொடர் வெயிலின் தாக்கத்தால் மனைவி, குழந்தையை அங்கேயே இருக்கும் படி கூறிவிட்டு பைக்கை எடுக்கச் சென்ற கார்த்திகேயன், 2 மணி நேரமாக வராததால் அவரது மனைவி பதற்றமடைந்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர், கார்த்திகேயனின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்ட ஒரு நபர், உங்களது கணவர் வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி, தனது கணவர் இருக்கும் இடத்தை கேட்டு, கூட்ட நெரிசலில் மிகுந்த சிரமத்துக்கிடையே, தனது குழந்தையுடன் அங்கு சென்று பார்த்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மெரினா மரணங்கள்: ஐந்து பேர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கணவர் மரணத்தை அறிந்த சிவரஞ்சனியும், அவரது குடும்பத்தினரும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகினர். இச்சூழலில் கணவர் எவ்வாறு இறந்தார் என்பதற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறாததால், கார்த்திகேயனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். பின்னர், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவரஞ்சனி கூறியதாவது: "மெரினா வான் சாகச நிகழ்ச்சி நிறைவு பெறும் நேரத்தில் எங்களை அங்கேயே இருக்கும்படி தெரிவித்து விட்டு, எனது கணவர் தீவுத் திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பதற்காக சென்றிருந்தார். 2 மணி நேரம் கடந்தும் அவர் வராததால் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன்.

ஆனால் தொலைத்தொடர்பு இல்லாத காரணத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இது தொடர்பாக எனது குடும்பத்தினருக்கு தெரிவித்தேன். அவர்களும் போனில் தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களாலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

பிறகு எனது கணவர் செல்போனில் இருந்து ஒரு நபர் தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மயக்க நிலையில் இருக்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா? என கேட்டார். எந்தப் பழக்கமும் இல்லை என பதிலளித்தேன். மேலும், அவர் இருக்கும் இடத்தை கேட்டறிந்து உடனடியாக அங்கு சென்று பார்த்தேன். எனது கணவர் மயங்கி கீழே விழுந்து இரண்டு மணி நேரம் ஆகியும் அவருக்கு எந்தவிதமான முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.

அங்கு சரியான பாதுகாப்பு வசதிகள் இருந்திருந்தால் என் கணவர் உயிர் பிழைத்திருப்பார். நிகழ்ச்சி முடிந்த பிறகு வாகனம் எடுக்க சென்றவர் தான், திரும்ப வரவே இல்லை. மரணத்துக்கான காரணத்தை மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியாக கூறவில்லை. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் காவல் துறையினர், அரசு அதிகாரிகளை நம்பிதானே ஒரு நிகழ்வுக்கு வருகிறோம். எங்கள் வீட்டில் அவர் மட்டுமே உழைப்பவர். அரசு எங்களுடைய குடும்பத்துக்கு உரிய வழியை காண்பிக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே மெரினா வான் சாகச நிகழ்வுக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகேயனின் மாமனார் கோபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இருசக்கர வாகனத்தை எடுத்துவருவதாக மதியம் 1 மணிக்கு சென்றவர் பிற்பகல் 3 மணி வரை வரவில்லை. அவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. டீ அருந்தும் பழக்கம் கூட இல்லாத கார்த்திகேயன், போதையில் படுத்து கிடப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட வர வழியில்லை என தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதி எதுவுமே இல்லை: "குழந்தைக்கான பால், தண்ணீர் இன்றி எனது மகள் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். கூட்டமாக இருந்ததால் நான் அங்கு செல்வதற்கு மாலை 5 மணி ஆகிவிட்டது. நான் பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. பின்னர், அதே எண்ணிலிருந்து பேசிய போலீஸ்காரர், கார்த்திகேயன் மயங்கிக் கிடப்பதாக தெரிவித்தார்.

பின்னர், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு எனது மருமகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தில் சம்பாதிப்பவர் அவர் மட்டுமே. எனவே, கைக்குழந்தை மற்றும் வயதான அம்மா உள்ள நிலையில் எனது மகளின் வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என்றார்.

கார்த்திகேயனின் சித்தப்பா சீனிவாசன் கூறியதாவது: "கார்த்திகேயன் விமான சாகசத்தை காண, மெரினாவுக்கு காலை 9 மணிக்கே மனைவி, குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அங்கு காலையிலிருந்து மதியம் 1.30 மணி வரை வெயிலாக இருந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் வண்டியை எடுக்க சென்றவர் சிறிது தூரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை குறை சொல்ல இயலாது.

ஆனால், யாராவது தண்ணீர் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மனைவிக்கு தெரியவந்ததும், அங்கு சென்று அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால், கூட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைப்பது மற்றும் வந்து சேர்வது சிக்கலாகிவிட்டது.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு நேரம் கடந்ததால் அவரது உயிரை காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. அரசு எதிர்பார்த்ததை விட கூடுலாக லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.

இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கார்த்திகேயன் மட்டுமே குடும்பத்தின் வாழ்வாதாரம். தற்போது அவரும் இறந்துவிட்டார். எனவே, கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு அரசு ஏதேனும் வேலை வழங்கினால் வாழ்வாதாரத்துக்கு உதவும்." என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.