ETV Bharat / state

ஒரு வருட குற்றப்பத்திரிக்கை ரிப்போர்ட்டில் முரண்; நீதித்துறை, காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு!

கடந்த ஓராண்டில் 14 மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விவரங்களில் வேறுபாடு இருப்பதாக கூறி உரிய விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மதுரை: ஓய்வு பெற்ற சிறப்பு பாதுகாப்பு படை வீரர் (BSF) ஜனார்த்தனன். இவர் ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய இரண்டு முன்னாள் பிரதமர்களுக்கு சிறப்பு பாதுகாவலராக இருந்தவர். தனது தாயாரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற்று தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தனது தாயாருக்கு மருந்து வாங்க வெளியே சென்ற போது கொரோனா காலகட்டத்தில் விதிகளை மீறி வெளியே வந்ததாக காவல்துறை இவரைப் பிடித்த போது, தான் சிறப்பு பாதுகாப்பு படை வீரர் (BSF) என தெரிவித்துள்ளார்.

அப்போது, காவல்துறையினருக்கும், இவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஜனார்த்தனன் புகார் செய்திருந்த நிலையில், தற்போது நான்கு வருடம் கழித்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தன் மீது நான்கு வருடம் கழித்து பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, காவல்துறையின் அறிக்கையில் முரண்பாடு இருந்ததால் 14 மாவட்ட நீதிமன்றங்களில், கடந்த 1 ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விவரங்களை நீதித்துறை மற்றும் காவல்துறை தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: நெல்லை நீட் அகாடமி விவகாரம்; புகார் அளிக்காமலேயே நடவடிக்கை சாத்தியமானது எப்படி? சட்டம் கூறுவது என்ன?

ஜனார்த்தனன் தரப்பில் வழக்கறிஞர் பினை காஸ் ஆஜராகி, ஒரு புகாரில் 4 வருடம் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதம். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது குறித்து தெளிவான தீர்ப்பு கூறி உள்ளது. மேலும், தற்போது காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் முற்றிலும் முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக வாதிட்டார். அப்போது, 14 மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் காவல்துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதை பார்த்த பின் நீதிபதி, "நீதித்துறை மற்றும் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் படி குற்றப்பத்திரிக்கையின் எண்ணிக்கைகளில் பெரும் வேறுபாடு உள்ளது. முதன்மை மாவட்ட நீதிபதிகளின் அறிக்கையின் படி 2 லட்சத்து 2,694 குற்றப்பத்திரிகைகள் கடந்த ஓராண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 ஆயிரத்து 650 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்கு எடுக்கப்படுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது. ஆனால், காவல்துறையின் அறிக்கையின் படி ஒரு லட்சத்து 44 ஆயிம் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 42 ஆயிரத்து 12 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மத்திய மண்டலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற பத்திரிக்கையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆகவே, காவல்துறையிடம் இருந்து பெற்ற அறிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை காவல்துறைக்கும் அனுப்ப பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

அது தொடர்பான விளக்கத்தை அக்டோபர் 25 தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.