ETV Bharat / state

'மூழ்குகின்ற கப்பலில் இருந்து வெளியேறும் எலிகள்'.. திமுக கூட்டணி கட்சிகளை மறைமுகமாக சாடிய எச். ராஜா..! - H RAJA ON DMK

கச்சத் தீவை இலங்கைக்கு சட்டவிரோதமாக தாரை வார்த்த காங்கிரஸ் அரசை, பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர் கருணாநிதி என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.

எச். ராஜா. திருமாவளவன் கோப்புப்படம்
எச். ராஜா. திருமாவளவன் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 8:10 PM IST

திருச்சி: திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, '' கடந்த 1998 பிப்ரவரி 14 ஆம் தேதி அத்வானி கோவை வந்த போது, அல்உம்மா இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் வைக்கப்பட்டதில், 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1984 இல் ராமகோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி.

நேற்றைய தினம் அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் 30, 40 பேர் செல்லலாம் என்று போலீசாரோ, அரசாங்கமோ சொல்லியிருந்தால் நாகரீகம் தெரிந்தவர்கள் என்று சொல்ல முடியும். கடந்த 15 நாட்களுக்கு முன் வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக, பா.ஜ.க போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்பதை அனுமதித்துள்ளனர்.

கோவை சம்பவம் எடுத்துக்காட்டு

தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. சட்டத்தின் ஆட்சியில்லை என்பதற்கு, கோயம்புத்துாரில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டு. காவல் துறைக்கு வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லை. மக்களால் தூக்கியெறியப்பட வேண்டிய பொது ஜன விரோத அரசு ஸ்டாலின் அரசு. இந்த அரசு இந்துக்களுக்கு விரோதமாக, பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு உண்மையின் பால் ஈர்ப்பு இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுகின்றனர். இந்திரா காந்தி காலத்தில், சட்ட சபைகளை முடக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் குரல்வளையை நெரித்தனர்.

வெளியேறும் எலிகள்

கச்சத் தீவை இலங்கைக்கு சட்டவிரோதமாக தாரை வார்த்த காங்கிரஸ் அரசை, பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர் கருணாநிதி. மக்கள் இதை அறிந்து உள்ளதால் இனிமேலும், காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் மக்களை ஏமாற்ற முடியாது. கடலில் மூழ்கும் கப்பலில் எலிகள் இருக்காது என்பது ஆங்கில பழமொழி. வேல்முருகன், திருமாவளவன் போன்றவர்கள் மூழ்குகின்ற தி.மு.க என்ற கப்பலில் இருந்து வெளியேறும் எலிகள் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல. இது எதார்த்தமாக நடக்கும் சம்பவம்.

கூட்டணி குறித்து, கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், கருத்துச் சொல்லும் நுாறு சதவீதம் உரிமை மாநில தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் உள்ளது. உங்கள் மூலமாக எங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு, கட்சித் தலைமைக்கும் எனக்கும் இடைவெளி கிடையாது'' என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.