ETV Bharat / state

நடிகர் விஜய்யின் கட்சியால் யாருக்கு பாதிப்பு? - பாஜக ஹெச்.ராஜா சொல்வது இதுதான்! - H Raja Spok About TVK Party

H.Raja Opined About Vijay's TVK Party: திராவிட கொள்கைகளுடன் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா
தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 8:09 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா வருகை தந்து, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசிய அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, "ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது. மேலும், அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால்தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்துள்ளனர்.

பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது ஏன்? சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே? ஆகவே, பிரதமர் குறித்து பேசிய தா.மோ.அன்பரசனை கைது செய்ய வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, மகாவிஷ்ணு குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் அதற்கு நான் கூட வருத்தம் தெரிவிப்பேன். ஆகவே, தமிழக அரசு மகாவிஷ்ணு மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக விஜயின் த.வெ.க. மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி, தமிழக பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது. மேலும், திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக் கழகம் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சியைதான் பாதிக்கும்" என்று ஹெச்.ராஜா பதிலளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.