ETV Bharat / state

"விஜயால் பா.ஜ.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை திமுகவினருக்கு தான் பாதிப்பு" - எச்.ராஜா திட்டவட்டம்!

பிரிவினைவாதம் பேசக்கூடிய த.வெ.க-வின் தலைவர் விஜயால் பா.ஜ.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் திராவிட சித்தாந்தத்தை பேசுவதால் திமுகவினருக்கு தான் பாதிப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு
எச்.ராஜா மற்றும் விஜய் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ஈரோடு: ஈரோடு பாரதி ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தேர்தல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, "தமிழக ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அப்போது வாழ்த்து பாடல் பாடுபவர் வராததால் தற்காலிகமாக வேறு ஒருவர் பாடினார் அதில் சில தவறுகள் ஏற்பட்டன அதற்காக ஆளுநர் மீது கடும் விமர்சனங்களை திமுக வைத்தது.

எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஆனால், தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் இதே போன்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒருமுறை அல்ல மூன்று முறை பிழை ஏற்பட்டது. இதனை டெக்னிக்கல் ஃபால்ட் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஆளுநரை அநாகரிகமாகப் பேசிய துணை முதலமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், அவரை முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "முதலமைச்சர் போதைக்கு எதிராக வீடியோ வெளியிட்டுள்ளார். அது தினமும் தொலைக்காட்சியில் கூட தினமும் விளம்பரம் செய்யப்படுகிறது. அதில், ஒரு தந்தையை போல் நான் அழைப்பு விடுக்கிறேன் என்கிறார். ஆனால், இங்கு மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருப்பது யார்?

இதையும் படிங்க: 2026-ல் த.வெ.க. சின்னம் என்ன? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள்

மேலும், ஆயிரம் கிளப்புகளுக்கு கடந்த ஆறு மாதங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு மது விற்பனை செய்யப்படும்? தமிழகம் முழுதும் பள்ளிகளுக்கு அருகே கூட கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்யப்படுகின்றனர். இது குறித்து ஆளுநர் கூட கேள்வி எழுப்பியுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் த.வெ.க மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரிவினைவாதம் பேசக்கூடிய த.வெ.க-வின் தலைவர் விஜயால் பா.ஜ.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக அவர் திராவிட சித்தாந்தத்தை பேசி, திராவிட கட்சிகளின் ஓட்டை தான் அவர் பிரிப்பார் என்பதால் திமுகவினருக்கு தான் பாதிப்பு" என எச்.ராஜா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.