ETV Bharat / state

உ.பி. பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! - 3 bullets seized in Chennai Airport - 3 BULLETS SEIZED IN CHENNAI AIRPORT

Bullets Seized in Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்ல வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்து 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 3:46 PM IST

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களது உடைமகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து விமானத்தில் ஏற அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சுமார் 45 வயது தனியார் பள்ளி ஊழியர் ஒருவர், இந்த விமானத்தில் டெல்லி செல்வதற்காக வந்தார். அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, அந்த கைப்பையில் வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதையடுத்து, பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தனியே நிறுத்தி வைத்தனர். அதோடு, அந்த கைப்பையை எடுத்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறந்து பார்த்தனர். அந்த கைப்பைக்குள் 8 எம்எம் ரக துப்பாக்கி குண்டுகள் மூன்று இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அந்தத் துப்பாக்கி குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்ட குண்டுகள் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலப் பயணியின் டெல்லி பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பயணி தான் உத்தரப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றுவதாகவும், தனது மகன் சென்னையில் ஒரு கல்லூரியில் படிப்பதால் அவரைப் பார்த்து விட்டு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் உத்தரப்பிரதேசம் செல்ல டெல்லி விமானத்தில் பயணிக்க வந்ததாகவும் கூறினார்.

அதோடு தனது அண்ணன் ராணுவத்தில் பணியில் இருக்கிறார். இந்தப்பை எனது அண்ணனுடைய பை தான். எனவே, இந்தப் பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்தது எனக்கு தெரியாது. மேலும், நான் டெல்லியில் இருந்து வரும்போது இதே பையில்தான் எனது துணிகளை வைத்துக் கொண்டு வந்தேன் என்றும் கூறினார். ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்த பயணியையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடித்த நிலையில் காலியான துப்பாக்கி குண்டுகள் மூன்றையும் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் உத்தரப்பிரதேசம் மாநிலப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையே, அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய நிலையில், சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தோட்டத்தில் பழம் பறித்த பழங்குடியின வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட நபர்! -

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.