ETV Bharat / state

குரூப் 2 தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை? தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை! - GROUP 2 EXAM TNPSC RELEASED NORMS - GROUP 2 EXAM TNPSC RELEASED NORMS

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் தவறு செய்தாலோ அல்லது ஒழுங்கீனச் செயல்பாட்டில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எச்சரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம்  - கோப்புப் படம்
டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் - கோப்புப் படம் (Credit - TNPSC)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:31 PM IST

சென்னை: குரூப்2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுகள் செப் 14 ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 காலி பணியிடங்களும், குரூப் 2ஏ பதவிகளின் மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குருப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் குருப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வின் போது தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வர்களுக்கான அறிவுரைகள் : ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக்கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் தேர்வர்கள் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.

தேர்வு மையத்திலோ அல்லது வெளியிலோ விரும்பத்தகாத அல்லது ஒழுங்கீனச் செயல்களுக்கு அல்லது தீய நடவடிக்கைகளுக்கு தேர்வர் ஈடுபட்டால் விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் குறிப்பிட்ட நாட்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.

தேர்வுக்கூடத்தில் மற்ற தேர்வர்களுடன் கலந்தாலோசித்தல், விடைத்தாளினை பார்த்து எழுதுவது, தன்னுடைய வினாத்தாளுடன் கூடிய விடைப் புத்தகத்தினை பார்த்து எழுத மற்ற தேர்வர்களை அனுமதித்தல்,
புத்தகம் அல்லது அச்சிடப்பட்ட, தட்டச்சு செய்யப்பட்ட மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றை பார்த்து எழுதுதல், தேர்வுக்கூடத்தில் தேர்வர்கள் வினாக்களுக்கான விடைகள் தொடர்பாக அறைக் கண்காணிப்பாளரையோ அல்லது வேறு அலுவலரின் உதவியை நாடுதல், தேர்வர்கள் தேர்வாளரை அணுகுதல் அல்லது அதற்கு முயற்சி செய்தல் அல்லது மற்றவர் மூலம் தேர்வாளரை அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் விலக்கி வைக்கப்படுவர்.

மேலும், செல்போன், நிணைவூட்டுக் குறிப்புகள் அடங்கிய கைக் கடிகாரங்கள் மற்றும் மோதிரங்கள் அல்லது வேறு வகையான மின்னணு, மின்னணு சாராத சாதனங்களான P & G Design Data புத்தகம், கைப்பைகள் ஆகியவற்றை தேர்வர்கள் தேர்வு அறைக்குள் வைத்திருத்தால் 3 ஆண்டுகள் விலக்கி வைக்கப்படுவர்.

தேர்வுக் கூடத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத வினாத்தாளுடன் விடைப்புத்தகத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அறைக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் செல்லுதல், OMR விடைத்தாள், வினாத்தாளுடன் கூடிய விடைப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள பட்டைக் குறியீட்டை சேதப்படுத்தினால் 3 ஆண்டுகள் விலக்கி வைக்கப்படுவர்.

வினாத்தொகுப்பு, வினாத்தாளுடன் கூடிய விடைப்புத்தகம் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றை மீறினால் நிரந்தரமாகவா அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவதுடன் அவர்தம் விண்ணப்பமும் உரிய நடைமுறைகளுக்கு பின்னர் நிராகரிக்கப்படும்.

தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்களின் ஆதரவை பெற நேரடியாகவோ, கடிதத்தின் மூலமாகவோ, உறவினர், நண்பர், காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை செலுத்த முயற்சித்தால் 3 ஆண்டுகள் விலக்கி வைக்கப்படுவர்.

ஆதரங்களான சான்றிதழ்களை போலியாக சமர்பித்தல் போன்றவற்றை செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறியடிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற கடுமையான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நிரந்தரமாக விலக்கி வைக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு.. மெயின்ஸ் தேர்வு எப்போது? - TNPSC Group 1 Result

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.