ETV Bharat / state

டிட்டோஜாக் போராட்டத்தை புறக்கணிக்கும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு! - TN School Teachers Protest - TN SCHOOL TEACHERS PROTEST

TETOJAC PROTEST: தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் நாளை கலந்தாய்வு மையங்கள் முன்பாக நடத்தும் மறியல் போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அதன் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:36 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணை 243 சமூக நீதிக்கானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியது தமிழக அரசின் அரசாணை எண் 243 அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வினை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது.

அரசாணை எண் 243 மாநில முன்னுரிமையை முன் நிறுத்துவதால் ஒன்றிய முன்னுரிமை பாதிப்பு என தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் நீலி கண்ணீர் வடித்து இரட்டை வேடம் போடுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2006 ஆம் ஆண்டு பணி வரன்முறை செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் மறுக்கப்பட்ட உரிமை அரசாணை எண் 243 ன் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஏற்க மறுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் (திங்கள்)நேற்று நடைபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு , இன்று (செவ்வாய்) நடைபெற உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடைபெறும் போது புதனன்று மட்டும் அதனை எதிர்த்து மறியல் செய்வேன் என இரட்டை வேடம் போடுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பணியிட மாறுதல் ஒன்றே தற்போது தொலைதூரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். இந்த உண்மையை உணர்ந்தும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற மறியல் போராட்டத்திற்கு ஆர்வம் காட்டும் ஆசிரியர் கூட்டமைப்புகள் ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு என்பதை அரசு மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்விற்கு அவசியமில்லை என அரசு கொள்கை முடிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்தை இன்று வரை அரசை வலியுறுத்தவில்லை.

மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடக்கக்கூடாது என கண்மூடித்தனமாக போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஒன்றியத்திற்கு சந்தா வாங்கி சங்கம் வளர்க்கும் கூட்டமைப்புகள் தன் கீழுள்ள ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலில் செல்ல விடாமல் கூண்டுக்கிளி ஆக அடைத்து வைத்து ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகாமல் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகவே இப்போராட்டம் என்பதை அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் உணர வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 243 ஆல் எவ்வித பாதிப்பும் இல்லை இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்ற திருத்தம் விரைவில் அரசால் வெளிவிடப்பட உள்ளது.

பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம், 2004-2006ஆம் ஆண்டில் பணியேற்ற ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை, ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் போன்ற எண்ணற்ற ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு போராடாமல் அரசாணை எதிர்ப்பு என்ற ஒற்றை கோரிக்கைக்காக தன் இன ஆசிரியர்களை திசை திருப்பி மறியல் போராட்டத்திற்கு அழைக்கிறது சுயநலம் மிக்க இந்த கூட்டமைப்புகள்.

அரசாணை எண் 1383 அரசாணை எண் 166 இதனால் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி தகுதி இருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு அரசாணை எண் 243 ஆல் பதவி உயர்வு பெற இருக்கும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஜூலை 3ம் தேதி (புதன்) பள்ளிக்கு சென்று பணி புரிவார்கள் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்தவரின் உரிமையை நசுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்புகளின் நாளை நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் பாலி கிளினிக் இயங்கும் நேரம் அறிவிப்பு - என்னென்ன சேவைகள் பெறலாம்? - Chennai Evening Medical Camp

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.